Saturday, 22 February 2014
Wednesday, 19 February 2014
சமுதாய புரட்சிக்கு போர்ச்சங்கூதும் மாநாடு!.
திருச்சி திமுக மாநாட்டில்
தமிழர் தலைவர் கி.வீரமணி உரை!.
மாலை 3 மணிக்கு புத்தூர் பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டோம்.
திருச்சி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு நான்கு கிலோமீட்டர்
தொலைவிற்கு முன்பே வாகனங்களை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
தலைவர் கலைஞர் அவர்கள் மேடைக்கு வந்து விட்டார்
என்ற செய்தி கிடைக்கிறது.
திராவிடர் கழகத்துக்காரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே
நிகழ்ச்சிக்கு செல்லக்கூடியவர்கள் என்பதால்
விரைந்து நடந்தே மாநாட்டு திடலை அடைந்தோம்.
வழி நெடுக தொண்டர்களின் கூட்டம். இது கொள்கைக்காக கூடிய கூட்டம்.
அதனால் உற்சாகத்தோடு நடந்து வந்தேன்.
எத்தனையோ மாநாடுகளை பார்த்திருக்கிறேன்.இது ஒரு திருப்பம்.
அஸ்தமனம் என்று எழுதிய ஏடு இன்று திருச்சி தினறியது என்று எழுதுகிறது.
இனியும் உங்கள் ஆரிய பாச்சா பளிக்காது.
நீங்கள் பணம் கட்டும குதிரை நொன்டிக்குதிரை.
அது பொய்க்கால் குதிரை.அது ஒரு போதும் ஜெயிக்காது.
இந்த மாநாட்டிலே பேராசிரியர் அவர்கள் ஆற்றியது இனமான உரை.
அதை தாய்க்கழகம் என்ற முறையில் அப்படியே வழிமொழிகிறேன்.
அன்மையில் பேராசிரியர் அவர்கள் பேசிய உரையை
சிறு நூலாக வெளியிட்டிருக்கிறோம்.
பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற
தோன்றியதுதான் நீதிக்கட்சி.
வைதீகர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபெற
பிறந்ததுதான் சுயமரியாதை இயக்கம்.
இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடர்கழகத்தின் இலட்சியம்.
இதை அரசியல் மூலம் சட்டத்தின் மூலம் நிலைநாட்ட
எடுத்துகொண்ட முயற்சிதான் திராவிட முன்னேற்ற கழகம்.
என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.
அதை தோழர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அஸ்தமனம் என்று சொல்கிறாயே அது உன் அழுக்கு மனசு.
சூரியன் எப்போதும் அஸ்தமனம் ஆவதில்லை.
அடுத்தநாள் மீண்டும் உதிக்கும்.
திருச்சியில் நடைபெற்ற திமுக வின் 2 வது மாநில மாநாட்டிற்கு
அண்ணா அழைத்தார். இப்போது கலைஞர் அழைத்திருக்கிறார்.
திருச்சி என்றாலே திருப்புமுனைதான்.
சுயமரியாதை திருமணத்துக்கு சட்டவடிவம் கொடுத்ததும்,
இருமொழி கொள்கையும், தமிழ்நாடு பெயர் மாற்றமும்
அண்ணாவின் சாதனையல்லவா?
அண்ணாவிற்கு பிறகு முதல்வர் பொறுப்பேற்க மறுத்த
கலைஞர் அவர்களை ஏற்றுகொள்ளுமாறு வற்புறுத்தினார் பெரியார்.
அருகில் இருந்தவன் என்கிற முறையிலே இதைச் சொல்கிறேன்.
கலைஞர் ஆட்சியில் இருந்தபோது ஹண்டே
இது மூன்றாந்தர ஆட்சி என்றார்.
உறுப்பினர்கள் எல்லாம் ஆத்திரப்பட்டனர்.
கலைஞர் எழுந்து இல்லை இல்லை. இது நான்காம்தர ஆட்சி.
சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் நான்காம்தர ஆட்சி
என்று பிரகடனப்படுத்தினார்.
விடுதலையில் தலைப்புச்செய்தியாக வெளியிட்டோம்.
பெரியார் அவர்ரகள் பெரும் பூரிப்படைந்தார்கள்.
இது கலைஞரைத்தவிர வேறு யாரும்
செய்யக்கூடிய விஷயமல்ல என்று குறிப்பிட்டார்கள்
கோட்டைக்குப் போவது எங்கள் வேலை அல்ல.
கோட்டைக்கு வெளியே நின்று அதில் ஓட்டைப்போடாமல்
பார்த்துகொள்பவர்கள் கருப்புச்சட்டைக்காரர்கள்.
திமுக தோற்றது என்றால் பார்ப்பன ஆதிக்கம்
ஜெயித்தது என்று தானே அர்த்தம்.
அனைத்து சாதியினர் அர்ச்சகர் சட்டம் என்னவாயிற்று?
சிதம்பரம் கோவிலை மாற்றிப்போட்டார்களா? இல்லையா?
இங்கே நடைபெறுவது அரசியல் மாநாடு என்று கருதாதீர்கள்.
சமுதாய புரட்சிக்கு போர்ச்சங்கூதும் மாநாடு.
-கி.வீரமணி

Tuesday, 4 February 2014
Subscribe to:
Comments (Atom)